Connect with us

அடேங்கப்பா! சூரியின் ‘மாமன்’ வசூல் வேட்டை – மொத்தம் இத்தனை கோடியா?

Featured

அடேங்கப்பா! சூரியின் ‘மாமன்’ வசூல் வேட்டை – மொத்தம் இத்தனை கோடியா?

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தமிழ் திரையுலகில் வெற்றி படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. கதைக்கருவில் வித்தியாசம் கொண்டு வருபவை, மக்களின் ஆதரவையும் பெருமளவில் பெறுகின்றன.

இந்நிலையில், நடிகராக மட்டும் இல்லாமல் தற்போது ஹீரோவாகவும் தன்னை நிலைநாட்டி வரும் சூரி, முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம் கடந்த மே 16ம் தேதி வெளியானது. பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில், சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குடும்ப உறவுகளில், மாமனும் மருமகனும் இடையிலான பாச பிணைப்பை உணர்ச்சிப்பூர்வமாக பதிவு செய்துள்ள ‘மாமன்’ திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளிலிருந்தே நல்ல வசூல் நிலையை பதிவு செய்து வரும் இந்த படம், தற்போது தமிழகத்தில் மட்டும் ரூ. 42 கோடி மற்றும் மொத்த உலகளாவிய வசூலாக ரூ. 47 கோடியைத் தாண்டியுள்ளது. இதன்மூலம் ‘மாமன்’ திரைப்படம் சூப்பர் ஹிட் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top