Connect with us

ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா..? ‘அமரன்’ படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்..!!

Cinema News

ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா..? ‘அமரன்’ படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்..!!

எஸ்.கே நடிப்பில் கம்பீரமாக தயாராகி நேற்று திரையரங்குகளில் வெளியான ‘அமரன்’ படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தை ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்திய அளவில் கோலூன்றி நிற்கும் பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமியின் நேர்பட இயக்கத்தில் உருவான திரைப்படமே அமரன் .

நம்ப வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் கம்பீர நடிப்பில் ரியல் ஸ்டார் சாய் பல்லவி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்துள்ள இப்படத்திற்கு மெல்லடி பிரின்ஸ் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற ராணுவ வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.

வெளியான முதல் நாளிலேயே இப்படம் நல்ல பல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தற்போது ‘அமரன்’ திரைப்படம், ஒரே நாளில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த விவரத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதன்படி திரையரங்குகளில் நேற்று வெளியான சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படம், ஒரே நாளில் உலகளவில் ₹42.3 கோடி வசூல் செய்துள்ளதாக பட நிறுவனம் சிறப்பு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷுக்கு வில்லனாக நடிக்க அருண் விஜய் வாங்கிய சம்பளம்... எவ்வளவு?

More in Cinema News

To Top