Connect with us

டப்பா ரோல் என ஜோதிகாவை தான் சொன்னேனா.. சிம்ரன் கொடுத்த விளக்கம்..

Featured

டப்பா ரோல் என ஜோதிகாவை தான் சொன்னேனா.. சிம்ரன் கொடுத்த விளக்கம்..

சில வாரங்களுக்கு முன்னர் விருது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை சிம்ரன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது, சிம்ரன் தேர்வு செய்து நடிக்கும் கதாபாத்திரங்களை “ஆண்டி கதாபாத்திரங்கள்” என்று அந்த நடிகை கூறியதாக சிம்ரன் குறிப்பிட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பியது.

இந்நிலையில் சிம்ரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் இது தொடர்பாக விளக்கமாகவே பேசியுள்ளார். அதாவது, முதலில் அந்த விருது நிகழ்ச்சியில் சிம்ரன் பேசுகையில், “நான் ஒரு படம் பார்த்தேன். அந்த படத்தில் நடித்திருந்த நடிகையின் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் அவருக்கு மெசேஜ் செய்தேன். அதாவது, படம் பார்த்தேன், எனக்கு சர்ப்ரைஸாக இருந்தது. நீங்கள் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க காரணம் என்ன என்று கேட்டு மெசேஜ் அனுப்பியிருந்தேன். அதற்கு அந்த நடிகையோ, உங்களைப் போன்ற ஆண்டி கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு இது எவ்வளவோ மேல் என்று பதில் அனுப்பினார். எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. அந்த நடிகையிடம் இருந்து நான் இது போன்ற பதிலை எதிர்பார்க்கவில்லை” என்று கூறினார்.

மேலும் சிம்ரன் தொடர்ந்து பேசுகையில், “உங்களைப் போன்ற டப்பா ரோல்களில் நடிப்பதற்கு ஆண்டி ரோல்கள் எவ்வளவோ மேல், நான் அப்போதே கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்துள்ளேன் என்று கோபமாக பேசியிருந்தார்.” சிம்ரனின் இந்த பேச்சுக்கு இணையவாசிகள் ஜோதிகாவை கோர்த்து விட்டனர். அதாவது, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான வெப் சீரிஸான டப்பா கார்டல் வெப் சீரிஸில் ஜோதிகா நடித்துள்ளார். ஜோதிகாவுக்கு பதிலடி கொடுக்கத்தான் சிம்ரன் இவ்வாறு பேசியுள்ளார் என்று பலரும் பேசி வந்தார்கள்.

இந்நிலையில், சிம்ரன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மேடையில் அவர் பேசியது குறித்து விளக்கமாக பேசியுள்ளார். அதாவது, “இங்கு எத்தனையோ வெப் சீரிஸ்கள் வருகிறது. அதில் டப்பா கார்டெல் நல்ல வெப் சீரிஸ் என்று நினைக்கிறேன். நான் இன்னும் அந்த வெப் சீரிஸை பார்க்கவில்லை. நான் அன்றைக்குச் சொன்னது மிகவும் சரியாக சென்று சேர்ந்துள்ளது. அது சரியாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் அன்றைக்கு பேசியது ஏதோ திட்டத்துடன் பேசவில்லை. அது உண்மையிலேயே எனக்கு நடந்தது. அந்த மேடை எனக்கான மேடை என்பதால் நான் அதை பகிர்ந்து கொண்டேன்.” அவர் மேலும் கூறியுள்ளார், “நான் எனக்கு நண்பர்கள் இல்லை என்று சொல்கிறேன் என்பதற்காக எனக்கு நண்பர்களே இல்லை என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். எனது மன பக்குவத்திற்கு ஏற்ற நண்பர்கள் எனக்கு உள்ளார்கள். நான் எப்போதும் எனது உலகத்தில் இருக்கவே விரும்புவேன்.”

“அந்த நடிகை பேசியது எனக்கு மிகவும் காயத்தை ஏற்படுத்தியது, அன்றைக்கு நான் எனது ஆழ்மனதில் இருந்து பேசினேன். அந்த நடிகை அவரது கருத்தைச் சொல்கிறேன் என்பதை புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர் அதை வெளிப்படுத்த தேர்வு செய்த வார்த்தைகள்தான் என்னை மிகவும் காயப்படுத்தியது.” “அந்த சம்பவத்திற்கு பின்னர், சம்பந்தப்பட்ட நடிகையிடம் இருந்து மன்னிப்பு கேட்டு மெசேஜ் வந்தது.” என்றும் சிம்ரன் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டியில், தனக்கு அவ்வாறு மெசேஜ் செய்தது ஜோதிகா இல்லை என்று கூறாததால், இணையவாசிகள் தற்போது மேலும் ஜோதிகாவை அட்டாக் செய்து வருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top