Connect with us

புதுப் பையன் இல்லை, உங்கள் வேலையை பாருங்கள்.. கமலுக்கு சிம்புவின் சூப்பர் ரிப்ளை!

Featured

புதுப் பையன் இல்லை, உங்கள் வேலையை பாருங்கள்.. கமலுக்கு சிம்புவின் சூப்பர் ரிப்ளை!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் கமல்ஹாசன். உலக நாயகன் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவர். தற்போது, இவர் மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் ஜூன் 5ம் தேதி வெளியாகிறது. ரிலீஸ் தேதியை முன்னிட்டு, புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த படத்தில் கமலுடன் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது முதல் முறையாக இருவரும் இணைந்து நடித்துள்ளதால், ரசிகர்களில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். இசைமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ஒரு நேர்காணலில் கமல் சிம்புவைப் பற்றி கூறிய விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், “சென்ற தலைமுறை போலவே, இந்த தலைமுறை நடிகர்களும் வளர்ந்து வருகிறார்கள். சிம்பு செட்டுக்கு வரும்போது, ‘நீ ஒரு லெஜெண்டுடன் நடிக்கப் போறாய்’ என்று பலர் சொன்னார்கள். ஆனால் நான் அவரிடம், பயப்படாதே என்றேன். அதற்கு சிம்பு, ‘நீங்கள் என்னை புதுப் பையன் என்று நினைக்காதீர்கள். உங்கள் வேலையை ஒழுங்காக பாருங்கள்’ எனக் கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது? சிம்ரன் மாஸ் அப்டேட்!

More in Featured

To Top