Connect with us

சரியும் சந்தானம்… சிக்ஸர் அடித்த சூரி! மாமன் vs டிடி நெக்ஸ்ட் லெவல் – 3 நாள் வசூல் விவரம்..

Featured

சரியும் சந்தானம்… சிக்ஸர் அடித்த சூரி! மாமன் vs டிடி நெக்ஸ்ட் லெவல் – 3 நாள் வசூல் விவரம்..

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி நடித்த மாமன் திரைப்படம் கடந்த மே 16ம் தேதி வெளியானது. சென்னை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலும் ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். முதல் நாளில் 1.75 கோடி வசூல் செய்த மாமன், இரண்டாம் நாளில் 2.95 கோடியாக உயர்ந்தது. ஞாயிற்றுக்கிழமையன்று வசூல் மேலும் அதிகரித்து 4.93 கோடி வரை சென்றது.மொத்தம் முதல் மூன்று நாட்களில் மாமன் படம் 9.64 கோடி வசூலித்துள்ளது.

அதே நேரத்தில் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படம், முதல் நாளில் 3 கோடி வசூலித்தது. இரண்டாம் நாளில் 3.1 கோடியும், மூன்றாம் நாளில் 3.3 கோடியும் வசூலித்து, மொத்தம் 9.40 கோடியை கடந்தது. சூரியின் மாமன் படம், பாச உணர்வுகளை மையமாகக் கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தது. அதனால் பலர் கண்களில் கண்ணீர் விட்டு வெளியே வந்ததாக கூறப்படுகிறது.

மாறாக, சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம், ரசிகர்களுக்கு பெரிய சிரிப்பை தரவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது. பொதுமக்களுக்கு சில சினிமா காட்சிகள் புரியவில்லையென்றும் கூறப்படுகிறது. மாமன், உணர்ச்சி பூர்வமான உள்ளடக்கத்தால் வெற்றிகரமாக செல்கிறது. இருவருக்கும் பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவுகிறது.இரண்டாவது வாரம் இந்த போட்டி எப்படி போகும் என்று காத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தக் லைப் படத்தில் குஷ்பு மகள் பணியாற்றியதைப் பார்த்தீர்களா? குஷ்புவின் உருக்கமான நன்றி..

More in Featured

To Top