Connect with us

Thug Life Review: இனிமேல் நான் தான் ரங்கராய சக்திவேல் — சிம்பு கமல்ஹாசனை மிஞ்சிட்டாரு!

Featured

Thug Life Review: இனிமேல் நான் தான் ரங்கராய சக்திவேல் — சிம்பு கமல்ஹாசனை மிஞ்சிட்டாரு!

கமல்ஹாசன், சிம்பு, மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள “தக் லைஃப்” படம் இன்று காலை 9 மணி முதல் தமிழ்நாட்டில் திரையிடப்படத் தொடங்கியுள்ளது. ஆனால் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இந்திய நேரப்படி அதிகாலையே படம் திரையிடப்பட்டு விட்டதால், அந்த பகுதிகளில் படம் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

வெளிநாட்டு ரசிகர்கள் கூறுவதைப் பார்த்தால், இந்த படத்தில் சிம்புவுக்கு அதிக மாஸான காட்சிகளும், ஸ்க்ரீன் ஸ்பேஸும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஒருவர் கூறுவதாவது, “மொத்தமாக படம் நன்றாக இருந்தாலும், கமல்ஹாசன் மற்றும் மணிரத்னத்தின் முந்தைய படங்களின் சாயல் தெரிகிறது. குறிப்பாக கமலின் ‘விக்ரம்’ மற்றும் மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படங்களின் நிழல் படத்தில் அடிக்கடி தெரிகிறது” என்றார். மேலும், “கமல்ஹாசனுடன் நடிப்பில் சிம்பு சமமாக போட்டியிட்டு இருக்கிறார். நாயகன் படத்தில் இருந்து ரங்கராய சக்திவேல் என்ற பெயர் இந்த படத்திலும் கமலுக்கு இருப்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் டிரைலரைப் பார்த்ததிலிருந்தே நாயகனை போல படம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. அதற்குப் பிறகும், படத்தில் உள்ள அப்பா-மகன் அதிகார மோதல் மற்றும் ஸ்க்ரீன்ப்ளே ஏற்கனவே பல முறை பயன்படுத்தியதுபோல உள்ளது” எனவும் தெரிவித்தார்.

இசைப் புயல் ஏ.ஆர். ரகுமான் இசைபற்றி ஒருவர் கூறும்போது, “கமல், சிம்பு இருவரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இசை பிரமாண்டமாக உள்ளது” என்றார். மற்றொரு ரசிகர், “படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் சிம்பு மிரட்டுகிறார். சில காட்சிகளில் கமலஹாசனை விட சிம்பு மேலோங்கி இருப்பதை உணர முடிகிறது. இடைவேளை காட்சி முழுக்க புல்லரிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. சிம்புவுக்கு இது ஒரு மைல்கல் படம்” என பதிவிட்டுள்ளார்.

அதே நேரத்தில் சிலர் படத்தின் மீதான விமர்சனங்களையும் பதிவு செய்துள்ளனர். ஒருவர், “படத்தில் சுவாரஸ்யம் இல்லை. வழக்கமான ஸ்டைலில் உருவாக்கப்பட்டு இருப்பதால் ஏமாற்றம் ஏற்பட்டது. நட்சத்திரங்கள், இசை மற்றும் ஒளிப்பதிவைத் தவிர கதைபோக்கில் புதுமை எதுவும் இல்லை” என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் கூறுகையில், “படத்தில் இருக்கும் எல்லா பாடல்களும் குறிக்கப்பட்டுள்ளன. ஜிங்குச்சா பாடல் மட்டும் தான் முழுமையாக இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருவர் கூறியிருப்பதாவது, “கமல்ஹாசன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிம்புவும் அட்டகாசமாக நடித்துள்ளார். ஆனால் இரண்டாம் பாதி படம் சற்று மெதுவாக போகிறது. மணிரத்னத்தின் சாயல் இருப்பதாக கூறினாலும், எந்தக் காட்சியிலும் அதைப் பெரிதாக உணர முடியவில்லை” என விமர்சித்துள்ளார். இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியது, இவை அனைத்தும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த விமர்சனங்களாகும். தமிழ்நாட்டில் இன்று காலை படம் வெளியான நிலையில், உள்ளூர் ரசிகர்கள் படம் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top