Connect with us

பேட்டிங்கில் அதிரடி காட்டிய சிக்கந்தர் ராசா – இந்திய அணிக்கு 153 ரன்கள் இலக்கு..!!

Featured

பேட்டிங்கில் அதிரடி காட்டிய சிக்கந்தர் ராசா – இந்திய அணிக்கு 153 ரன்கள் இலக்கு..!!

ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 4 ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்திய அணிக்கு 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கில் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2- 1 என கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இதில் Harare Sports Club மைதானத்தில் இன்று நடைபெறும் 4வது டி20 போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது .

இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக செய்வதாக அறிவித்தார் . இதையடுத்து இந்திய அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக வாய்ஸ்லி மற்றும் மறுமணி களமிறங்கினர் . சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இருவரும் அரைசதம் கடப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .

அடுத்து வந்த பிரைன் பென்னட் 9 ரன்களில் வெளியேற பின்னர் வந்த சிக்கந்தர் ராசா அதிரடியில் மிரட்டினார். இதையடுத்து அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர்ந்த நிலையில் அவரும் 46 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே 152 ரன்கள் எடுத்தது . இதையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இந்திய அணிபேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆஷஸ் முதல் டெஸ்ட் நாளை ஆரம்பம்

More in Featured

To Top