Connect with us

சந்தானத்தின் 80s Buildup படத்தின் ட்ரைலர்…DD returns போல் ஹிட் கொடுக்குமா??

Cinema News

சந்தானத்தின் 80s Buildup படத்தின் ட்ரைலர்…DD returns போல் ஹிட் கொடுக்குமா??

காமெடி நடிகராக உச்சம் தொட்டவர் தான் நடிகர் சந்தானம் அவர்கள் என்று சொல்லலாம்…நடிகர் சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்கிற படத்தின் மூலம் தமிழ்த்திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்…இப்படத்தை தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து முடித்துள்ளார் அவர்…இவரின் அடுத்த படமான 80ஸ் Buildup படத்தின் ட்ரைலர் வந்துள்ளது…

குலேபகாவலி, ஜாக்பாட் படங்களை இயக்கிய கல்யாண் இப்போது இயக்கியுள்ள படம் தான் ‘80-ஸ் பில்டப்’….இதில் சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார் கதாநாயகியாக ராதிகா பிரீத்தி நடிக்கிறார்…கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்…இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது…இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கின்றது…இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

80-களில் நடக்கும் இந்தப் படத்தின் கதை, ஃபேன்டசி டிராமா-வாக உருவாகி வருகிறது.18 நாட்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளனர்..அதனால் குறைந்த செலவில் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது…இதில் ஆவி காதல் காமெடி என பல அம்சங்கள் இருக்கின்றது..

மேலும் இப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், முனீஷ் காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, தங்கதுரை ஆகியோர் படத்தின் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அதனால் கண்டிப்பாக காமெடி பேசப்படும் என்று சொல்லப்படுகிறது…அது இந்த ட்ரைலரில் நன்கு தெரிகின்றது என்றும் சொல்லலாம்…

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ட்ரைலர் வந்துள்ளது ஒரு சாவு வீட்டில் நடக்கும் கதையாக இது இருக்கின்றது..என்ன நடக்கும் என்பதை போல தான் கதை நகரும் என தெரிகிறது,இப்படம் நவம்பர் 24 ரிலீஸ் ஆக இருக்கின்றது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவிப்பு..!!

More in Cinema News

To Top