Connect with us

சந்தானம் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் Trailer எப்போது?! வெளியான Update!

Cinema News

சந்தானம் நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் Trailer எப்போது?! வெளியான Update!

நடிகர் சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைக்கோத்துள்ளார். இந்தப் படத்தை பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரிக்கிறார்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள படத்துக்கு ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. ‘விட்னஸ்’ பட இயக்குநர் தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கவுண்டமணி செந்திலின் புகழ்பெற்ற நகைச்சுவை கதாபாத்திரமான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற பெயரை தலைப்பிட்டிருப்பதன் மூலம் படம் காமெடி ஜானரில் உருவாவது உறுதியாகியுள்ளது. படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று அறிவிப்பில் படத்தின் ட்ரைலர் ஜனவரி 11 நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  12 ஆண்டுகளுக்கு பின் ஜெய்ப்பூரில் ராஜஸ்தானை வெல்லுமா மும்பை - டாஸ் வென்ற MI பேட்டிங் செய்ய முடிவு..!!!

More in Cinema News

To Top