Connect with us

விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் இணையும் சமந்தா – நாக சைதன்யா? காரணம் என்ன தெரியுமா?

Featured

விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் இணையும் சமந்தா – நாக சைதன்யா? காரணம் என்ன தெரியுமா?

சமந்தா மற்றும் நாகா சைதன்யா 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஆனால், 2021ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து செய்து பிரிந்தனர். இந்த பிரிவு ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்கள் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தாலும், முதன்முறையாக ஜோடியாக நடித்த படம் ‘யே மாய சேசாவே’ ஆகும். இந்த படத்தை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ளார். தமிழ் திரைப்படமாக வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் தான் ‘யே மாய சேசாவே’. 2010ம் ஆண்டு வெளியாகிய இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், வெளியானதில் இருந்து 15 ஆண்டுகள் கழித்து ‘யே மாய சேசாவே’ படத்தை மீண்டும் திரையில் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. படக்குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருகிற ஜூலை 18ம் தேதி இந்த காதல் கிளாசிக் திரைப்படம் தெலுங்கு ரசிகர்களை சந்திக்க வருகிறது. ரசிகர்கள் இதனை திரையரங்குகளில் மீண்டும் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Bigg Boss கலக்கல் ட்ராமா! பிரஜனை பார்த்த சாண்ட்ரா கதறி அழுது மயக்கம்…!”

More in Featured

To Top