Connect with us

குடும்பத்துடன் ‘கனிமா’ பாடலுக்கு நடனமாடிய ஏ.ஆர். முருகதாஸ் – வைரலாகும் செம க்யூட் வீடியோ!

Featured

குடும்பத்துடன் ‘கனிமா’ பாடலுக்கு நடனமாடிய ஏ.ஆர். முருகதாஸ் – வைரலாகும் செம க்யூட் வீடியோ!

இந்திய திரைப்படத் துறையில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் ஏ.ஆர். முருகதாஸ், தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளார். அவரது இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘சிக்கந்தர்’. சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் ஹிந்தியில் வெளியானது. ஆனால், வசூலிலும் விமர்சனங்களிலும் பெரிதாக வரவேற்பு இல்லாததால், படம் பெரும் தோல்வியை சந்தித்தது.

இந்த படத்துக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் அடுத்த படம் ‘மதராஸி’. இது அவரது மாஸ் கம் பேக் திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில், ருக்மிணி வசந்த ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் வித்யுத் ஜாம்வல், பிஜு மேனன், விக்ராந்த் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் 2025 செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நேரத்தில், சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலான பாடல் ‘கனிமா’ தான். ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த பாடல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரசிகர்கள் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தனது மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் ‘கனிமா’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தனது மகளுடன் இணைந்து அவர் ஆடிய அந்த அழகான தருணம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒரு வருடத்தை கடந்த ‘இந்தியன் 2’ – வசூல் விவரம் வெளியாகியது!

More in Featured

To Top