Connect with us

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய Salaar..! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?!

Cinema News

பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய Salaar..! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?!

எப்படியாவது ஒரு மெகா ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்ற தீவிர முனைப்பில் இருந்த பிரபாஸ், அதற்காக KGF படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி முன்னணி இயக்குநராக திகழ்ந்துகொண்டிருக்கும் பிரசாந்த் நீலுடன் கைகோர்த்திருக்கிறார் அவர். யாஷுக்கு எப்படி மிகப்பெரிய திருப்புமுனையை பிரசாந்த் கொடுத்தாரோ அதேபோல் தனக்கும் கொடுப்பார் என்ற பெரும் நம்பிக்கையுடன் சலார் படத்தில் நடித்திருக்கிறார் பிரபாஸ்.

இந்த சூழலில் சலார் படமானது நேற்று உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியானது. பிரசாந்த் நீலுடன் முதன்முறையாக பிரபாஸ் இணைந்திருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றனர். முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படத்தை திருவிழா போல் கொண்டாடினார்கள். குறிப்பாக படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் படு பிரமாண்டமாக இருப்பதாக கூறிவருகின்றனர்.

ரசிகர்களில் ஒருதரப்பினர் படத்தை ஏகத்துக்கும் கொண்டாடினாலும் மற்றொரு தரப்பினர் படத்துக்கு சுமாரான ரெஸ்பான்ஸையே கொடுத்திருக்கின்றனர். அதாவது யஷ்ஷுக்கு ஹிட் கொடுத்தது போல் பிரபாஸுக்கும் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பில் அப்படியே KGF ஸ்டைலில் படத்தை அவர் எடுத்து வைத்திருப்பதாகவும்; அளவுக்கு அதிகமாகவே KGF வாடை அடிப்பதாகவும் விமர்சனத்தை முன்வைத்துவருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்துக்கு விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் வசூல் ரீதியாக படம் தூள் கிளப்பியிருக்கிறது. அதன்படி உலகம் முழுவதும் 170 கோடி ரூபாய்வரை வசூலித்திருப்பதாகவும் இந்திய அளவி 135 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘கள்வன்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

More in Cinema News

To Top