Connect with us

“அயலான் படத்தின் Audio Launch விழாவில் திடீர் மாற்றம்! நிகழ்ச்சி எங்க நடக்கபோகுது தெரியுமா?!”

Cinema News

“அயலான் படத்தின் Audio Launch விழாவில் திடீர் மாற்றம்! நிகழ்ச்சி எங்க நடக்கபோகுது தெரியுமா?!”

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக மாவீரன் திரைப்படம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதனிடையே கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த அயலான் அடுத்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. முன்னதாக இந்தப் படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது.

ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் முழுக்க முழுக்க சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. இன்று நேற்று நாளை என தனது முதல் படத்திலேயே டைம் ட்ராவல் பின்னணியில் சயின்ஸ் பிக்‌ஷன் மேஜிக் செய்திருந்தவர் இயக்குநர் ரவிக்குமார். இதனால் அயலான் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படத்தின் பெரும்பகுதி கிராபிக்ஸ் காட்சிகளால் உருவாகியுள்ளதாம். எனவே அயலான் செம்ம விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் ஃபைனான்ஸ் பிரச்சினை காரணமாக பாதியிலேயே ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதோடு கொரோனா ஊரடங்கு காரணமாக ட்ராப் ஆகும் நிலையில் இருந்தது. ஆனால் அயலான் படத்தின் உரிமையை வாங்கிய KJR ஸ்டுடியோ, மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி தற்போது ரிலீஸ் தேதியையும் குறித்துவிட்டது. அதன்படி ஜனவரி 12ம் தேதி அயலான் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அயலான் படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தடைகளை கடந்து அயலான் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அயலான் படத்தின் செகண்ட் சிங்கிளையும் கடந்த 20ம் தேதி படக்குழு வெளியிட்டது. ஏஆர் ரஹ்மான் இசையில் ‘அயலா அயலா’ என்ற டைட்டிலில் வெளியான இந்தப் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து அயலான் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமமாண்டமாக நடைபெறும் என சொல்லப்பட்டது. மேலும், அதில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்துக்கு பதிலாக, தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் வரும் 26ம் தேதி அயலான் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என சொல்லப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவச்செல்வங்களே விரைவில் சந்திப்போம் - விஜய்யின் அறிவிப்பால் உற்சாகத்தில் மாணவர்கள்..!!

More in Cinema News

To Top