Connect with us

சாக்ஷி அகர்வால் திருமணம்: மாப்பிள்ளை யார்? வைரல் புகைப்படங்கள்!

Featured

சாக்ஷி அகர்வால் திருமணம்: மாப்பிள்ளை யார்? வைரல் புகைப்படங்கள்!

சாக்ஷி அகர்வால், தமிழ் சினிமாவில் பல முக்கியப் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர். அவர் சிறு பாத்திரங்களில் நடித்து, பின்னர் ஹீரோயினாகவும் நடித்து தனது தனிப்பட்ட திறமையை காட்டி பரிச்சயமானார். ‘ராஜா ராணி’, ‘காலா’ போன்ற படங்களில் அவரின் நடிப்பு அதிகமாக பாராட்டப்பட்டது.

அதற்குப்பிறகு, பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் ட்ராக் மற்றும் சாக்ஷியின் கண்ணோட்டம் அந்த சீசனில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவை பிக் பாஸ் ரசிகர்களிடையே நிறைய கவனம் பெற்றது.

அந்தவகையில், சாக்ஷி அகர்வால் தற்போது தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயம் தொடங்கி இருக்கிறார். தற்போது அவருக்கு திருமணம் நடந்துள்ளது. அவரின் மணமகன் நவனீத் மிஸ்ரா, குழந்தை பருவத்தில் இருந்து நண்பராக இருந்தவர். தற்போது, அவரது திருமணம் கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று முடிந்தது.

சாக்ஷி மற்றும் நவனீத் தங்கள் காதலை வெளிப்படுத்திய பிறகு, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top