Connect with us

“AK 64 இயக்குனர் மாற்றம்? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் டீம்!”

Cinema News

“AK 64 இயக்குனர் மாற்றம்? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித் டீம்!”

நடிகர் அஜித் நடிக்க இருக்கும் AK 64 படம் குறித்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வருகின்றனர். பல மாதங்களுக்கு முன்பே இந்த படம் அறிவிக்கப்பட்டாலும், அஜித் கார் ரேஸில் ஈடுபட்டு இருந்ததாலும், சில பிற காரணங்களாலும் படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

இந்த தாமதத்தால், படத்தை சுற்றி பல வதந்திகள் பரவி வந்தன. அதில் முக்கியமாக, இயக்குனர் சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

முந்தைய படம் தோல்வியடைந்த நிலையில், மற்ற ஹீரோக்கள் சிவாவுடன் இணைவதில் தயக்கம் காட்டுகிறார்கள் என்ற பேச்சும் பரவியது. அதனால், அஜித் அவருக்கு வாய்ப்பு அளிக்கிறார் என்ற தகவலும் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆனால், இந்த தகவல்கள் அனைத்தும் உண்மையல்ல என அஜித்தின் மேனேஜர் தெளிவுபடுத்தியுள்ளார். AK 64 படத்தை இயக்குவது ஆதிக் ரவிச்சந்திரன் தான் என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், கடந்த சில நாட்களாக பரவி வந்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top