Connect with us

சாய் பல்லவி ஓபன் டாக்: விருதுகளை விட எனக்கு முக்கியம் அதுதான்!

Featured

சாய் பல்லவி ஓபன் டாக்: விருதுகளை விட எனக்கு முக்கியம் அதுதான்!

மலையாள சினிமாவில்தான் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார் சாய் பல்லவி. இன்று, இந்திய சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக உயர்ந்துள்ளார். தமிழில் கடந்த ஆண்டு வெளியான “அமரன்” படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும், வசூலும் பெற்றது. அதன் பிறகு, சமீபத்தில் “தண்டேல்” திரைப்படம் வெளியானது.

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான சாய் பல்லவி, தற்போது பாலிவுட் சினிமாவிலும் தனது பயணத்தை துவக்கியுள்ளார். இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் சாய் பல்லவி பகிர்ந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.


“எனக்கு விருதுகளைவிட ரசிகர்களின் அன்புதான் மிகவும் முக்கியம்.
தியேட்டரில் என் கதாபாத்திரங்களை பார்த்து, ரசிகர்கள் அந்த உணர்வுகளை தங்கள் வாழ்வோடு இணைத்து கொள்வதை தான்,
நான் என் உண்மையான வெற்றியாக நினைக்கிறேன்.” இது தான் சாய் பல்லவியின் உண்மை ரசிகர் பாசம் மீது உள்ள காதல்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top