Connect with us

‘சாமி’ பட வில்லன் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் புகைப்படம் வைரல் – தற்போதைய நிலை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

Featured

‘சாமி’ பட வில்லன் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் புகைப்படம் வைரல் – தற்போதைய நிலை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவை அறியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். ‘சாமி’, ‘திருப்பாச்சி’, ‘கோ’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் தனது தனிச்சிறப்பான நடிப்பால் வில்லனாக மிரட்டியவர். 1980-களில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிய இவர், பல வருடங்களாக தமிழிலும், தெலுங்கிலும் முக்கிய நடிகராக பங்களித்து வந்துள்ளார். அவரது திரைப்பட பயணத்திற்காக இந்திய அரசு 2015 ஆம் ஆண்டு அவரை பத்மஸ்ரீ விருதால் கௌரவித்தது.

இந்த நிலையில், தற்போது நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் அவர் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உள்ளதை பார்க்க முடிகிறது. மிகவும் மெலிந்திருக்கும் அவர், ஒரு காலில் கட்டு வைத்திருக்க, மற்றொரு காலில் சில விரல்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில் காணப்படுகிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி மற்றும் வருத்தம் அடைந்துள்ளனர். அவரது தற்போதைய நிலை வலியை ஏற்படுத்துவதாகவும், அவரை இவ்வாறான நிலையிலில் பார்க்கவே முடியவில்லை என்றும், சமூக வலைத்தளங்களில் பலரும் சோகமாக கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  STR 49 வெற்றிமாறன்–சிம்பு புதிய படம்: டைட்டில் ரிவீல்!

More in Featured

To Top