Connect with us

“SA v IND: தென் ஆப்பிரிக்காவை தெறிக்கவிட்ட அர்ஷ்தீப் சிங்! இந்திய அணிக்கு 117 ரன்கள் இலக்கு!”

Cinema News

“SA v IND: தென் ஆப்பிரிக்காவை தெறிக்கவிட்ட அர்ஷ்தீப் சிங்! இந்திய அணிக்கு 117 ரன்கள் இலக்கு!”

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட T20 கிரிக்கெட் தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று பிற்பகல் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்கத்திலிருந்து தடுமாறிய தென் ஆப்பிரிக்கா அணி சடசடவென விக்கெட்டுகளை விடத்தொடங்கியது. 27 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் 116 ரன்கள் எடுத்திருந்தது தென் ஆப்பிரிக்கா அணி.

தென்னாப்பிரிக்கா அணி ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் பந்து வீசும் முன் முதல் 15 ஓவர்களிலேயே அதிக ரன்களை சேர்த்து விட வேண்டும் என திட்டமிட்டது. அதனால், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஓவர்களில் ரன் குவிக்க முயற்சி செய்தனர். முகேஷ் குமார் ஓவர்களில் ஓரளவு ரன் சேர்த்த தென்னாப்பிரிக்க வீரர்களால் அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஓவர்களில் ரன் குவிக்க முடியவில்லை.

அத்துடன் சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப், ஆவேஷ் ஓவர்களில் அடித்த ஆட முற்பட்டு தங்கள் விக்கெட்களை வரிசையாக இழந்தனர். அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட், ஆவேஷ் கான் 4 விக்கெட்கள் என பிரமாதமான பௌலிங்கை இந்திய அணி வெளிப்படுத்தியது. 117 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது இந்திய அணி!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘ஓம்’ முதல் நாள் வசூல் ரூ.17.70 கோடி: தனுஷ் படத்தின் இந்திய, உலகளாவிய நிலவரம்

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top