Connect with us

SRH பந்துவீச்சை துவம்சம் செய்த ரசல் – ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்கு..!!

Featured

SRH பந்துவீச்சை துவம்சம் செய்த ரசல் – ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் இலக்கு..!!

SRH மற்றும் KKR அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த KKR – SRH அணிக்கு 209 ரன்களை இலக்காக வைத்துள்ளது

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது .

ரசிகர்களின் ஆரவாரத்துடன் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் அபாரமாக ஆடிய சென்னை அணி வெற்றியுடன் தொடரை தொடங்கி உள்ளது.

இந்நிலையில் இன்று சிறப்பான தரமான இரு போட்டிகள் நடைபெறுகிறது . இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பஞ்சாப் அணி டெல்லி அணியை அசால்டாக வீழ்த்தியது.

இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியில் SRH மற்றும் KKR அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். இதில் நரைன் 2 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுக்க களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னில் வெளியேறினார் .

அவரை தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயஸ் டக் அவுட் ஆக கொல்கத்தா அணியோ பரிதாப நிலைக்கு சென்றது .

இதையடுத்து இறுதி கட்டத்தில் ஜோடி சேர்ந்த ரசல் மற்றும் ரிங்கு அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை எங்கையோ எடுத்து சென்றனர் .

இறுதியில் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி. 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது . அந்த அணியில் அதிகபட்சமாக ரஸல் 65 ரன்களும் பில் சால்ட் 54 ரன்களும் அடித்தனர்.

இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது SRH அணி பேட்டிங் செய்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இறுதி நேரத்தில் செய்த சிறு தவறு - டெல்லியிடம் பரிதாபமாக வீழ்ந்தது குஜராத்..!!

More in Featured

To Top