Connect with us

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சனின் Pre Engagement பார்ட்டி – வைரல் போட்டோஸ்

Cinema News

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சனின் Pre Engagement பார்ட்டி – வைரல் போட்டோஸ்

பிரம்மாண்டமாக நடைபெற்ற நடிகை எமி ஜாக்சனின் Pre Engagement பார்ட்டி குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 2010ம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம் மதராசப்பட்டினம் . இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை எமி ஜாக்சன்.

முதல் படத்தில் கிடைத்த அட்டகாச அங்கீகாரத்தின் மூலம் ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பன்மொழி படங்களில் நடித்து திரையுலகை கலக்கி வந்தார் .

பின்னர் சிறிது காலம் படம் நடிக்காமல் ஆன்ட்ரூஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த எமி 2019ம் ஆண்டு அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார் ஆனால் துரதிஷ்டவசமாக ஆன்ட்ரூஸ் உடனான உறவை எமி முறித்து கொண்டார் .

இந்நிலையில் தற்போது நடிகை எமி ஜாக்சன் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருகிறார்.

அதனை உறுதி செய்யும் வகையில் எட் வெஸ்ட்விக் அழகிய மலை உச்சியில் இருக்கும் பாலத்தில் இருந்து எமி ஜாக்சனை செம க்யூட்டாக புரபோஸ் செய்தார் .

இந்நிலையில் தற்போது இந்த ஜோடிக்கு சமீபத்தில் பிரம்மாண்டமாக நிச்சியதார்தம் நடந்து முடிந்துள்ளது இதில், இருவரது குடும்பத்தினரும் நண்பர்களும் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  SRH அணிக்கு கடின இலக்கை கொடுக்குமா RCB..? RCB டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!!!

More in Cinema News

To Top