Connect with us

லக்னோ பந்துகளை தெறிக்கவிட்ட ருதுராஜ் – துபே – CSK அணி 210 ரன்கள் குவிப்பு..!!!

Featured

லக்னோ பந்துகளை தெறிக்கவிட்ட ருதுராஜ் – துபே – CSK அணி 210 ரன்கள் குவிப்பு..!!!

விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணிக்கு 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் CSK – LSG அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் CSK அணிக்கு எதிராக டாஸ் வென்ற LSG அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்து வீச முடிவு செய்தார் . இதையடுத்து லக்னோ அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணி பேட்டிங் செய்தது.

சென்னையின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் கேப்டன் ருதுராஜ் களமிறங்கினர். இதில் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே எளிமையான கேட்ச் கொடுத்து 1 ரன்னில் வெளியேறினார்.

இஹையடுத்து வந்த மிட்சலும் 11 ரன்களில் வெளியேற அடுத்ததாக ஜடேஜா களத்திற்கு வந்தார். ஒரு பக்கம் ருதுராஜ் அதிரடியாக ஆட மறுபக்க ஜடேஜா சற்று மந்தமாகவே களத்தில் காணப்பட்டார். ஒருகட்டத்தில் அவரும் 16 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து துபே மற்றும் ருதுராஜ் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியில் மிரட்டினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்த. அதிரடியில் மிரட்டிய ருதுராஜ் சதம் விளாசி மைதானத்தை அலறவிட்டார்.

இந்த பக்கம் சிக்ஸர்களாக விளாசிய துபே 66 ரன்களில் வெளியேற கடைசி இரு பந்துகள் இருக்கும் நிலையில் தோனி களத்திற்கு வந்தார் . பின்னர் ஒரு சிங்கள் எடுத்த ருதுராஜ் ஸ்ட்ரிக்கை தோனியிடம் கொடுக்க தோனி அதனை பவுண்டரியுடன் முடித்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்த சென்னை அணி 210 ரன்கள் குவித்தது. இதையடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது லக்னோ அணி பேட்டிங் செய்கிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

More in Featured

To Top