Connect with us

JOE படத்தை புகழ்ந்த திரையுலகம்…ஆகச்சிறந்த படம் Joe!சீமான் தகவல்!

Cinema News

JOE படத்தை புகழ்ந்த திரையுலகம்…ஆகச்சிறந்த படம் Joe!சீமான் தகவல்!

டீவியின் மூலம் அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையில் வளர்ந்து இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரியோ ராஜ்…இவர் முதன் முதலில் தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கினார்…அதில் இவருக்கு ஒரு நல்ல அடையாளம் கிடைத்தது..அதன் பின் அப்படியே வாழ்க்கை மாறியது..

இதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ரியோ அதை தொடர்ந்து நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்…அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது..அதன் பின் இவருக்கு படங்கள் அமையவில்லை….

தற்போது ரியோ நடிப்பில் உருவாகி வருகிற ஜோ…24ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ள திரைப்படம் தான் ஜோ…ஹரிஹரன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரியோவுடன் இணைந்து மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா, அன்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..இந்த படம் வரும் முன்னே நிறைய நல்ல நல்ல விமர்சனம் வந்து கொண்டு இருக்கின்றது…

நேற்று இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது படத்தை பார்த்தவர்கள் தங்களுடைய விமர்சனங்கள் தெரிவித்துள்ளனர்.இதில் படத்தை பார்த்த திரையுலக நட்சத்திரமும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் படம் நன்றாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.காதல் இல்லாமல் உலகம் இல்லை.

காதலுக்காக யாரும் சாகக்கூடாது காதலிக்காமல் யாரும் சாகக்கூடாது என்று பேசி இருக்கின்றார்..அப்படி ஒரு உன்னதமான படம் என இந்த படத்தை புகழ்ந்து பார்ட்டி இருக்கின்றார் நாம் தமிழர் சீமான்..அதனை போல பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவினின் 'ஸ்டார்' படத்தை தாறுமாறாக புகழ்ந்த இயக்குநர் நெல்சன்..!!

More in Cinema News

To Top