Connect with us

“IFFI GOA: 54ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதியின் ‘Gandhi Talks’ படம்!”

Cinema News

“IFFI GOA: 54ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதியின் ‘Gandhi Talks’ படம்!”

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக்கழகம் சார்பில் நடத்தப்படுவது இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆகும். சர்வதேச படைப்பாளிகள் ஒன்றுகூடும் இந்த விழாவில் சிறந்த படங்கள் திரையிடப்படும். இந்த வருடத்துக்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா (54ஆவது விழா) கோவாவில் நவம்பர் 21ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவில் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் மற்றும் நடிகர் ஷாகித் கபூர் ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடந்தது. இரண்டு பேரின் நடனமும் விழாவில் பங்கேற்றவர்களை அதிகமாகவே கவர்ந்தது. நிகழ்ச்சி தொடங்கியவுடன் மாதுரி தீட்சித்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நான்கு இடங்களில் மொத்தம் 9 நாட்கள் இந்த விழாவானது நடைபெறவிருக்கிறது. மொத்தம் 89 இந்திய திரைபப்டங்கள், 62 ஆசிய திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. இந்த சூழலில் இவ்விழாவில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘காந்தி டாக்ஸ்’ என்ற மௌன மொழி படத்தின் Promo வெளியிடப்பட்டு படமானது திரையிடப்பட்டது.

படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, அதிதி ராவ், அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றன. AR ரஹ்மான் இசையமைத்திருக்கின்றனர். இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் மௌன மொழி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சட்டென மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் - அரவணைப்புடன் அறிவுரை கூறிய எம்.எஸ்.தோனி..!!

More in Cinema News

To Top