Connect with us

உழைப்பிற்கு கிடைக்கப்போகும் பரிசு : குத்துச்சண்டையில் ஒலிம்ப்க் பதக்கத்தை உறுதி செய்தார் இமேன் கெலிஃப்..!!

Featured

உழைப்பிற்கு கிடைக்கப்போகும் பரிசு : குத்துச்சண்டையில் ஒலிம்ப்க் பதக்கத்தை உறுதி செய்தார் இமேன் கெலிஃப்..!!

பாரிஸ் ஒலிம்ப்க் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றுள்ள அல்ஜீரியா நாட்டை சேர்ந்த வீராங்கனை இமேன் கெலிஃப் ஒலிம்ப்க் பதக்கத்தை உறுதி செய்துள்ளார் .

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ பிரிவின் காலிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது . இந்த போட்டியில் வெறித்தனமாக ஆடிய அல்ஜீரியா நாட்டை சேர்ந்த வீராங்கனை இமேன் கெலிஃப் ஹங்கேரி வீராங்கனை லூகா ஹமோரியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்துள்ளார் .

குத்துச்சண்டையில் அரையிறுதிப் போட்டியில் தோற்பவர்களுக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்படும் நிலையில், இமேன் பதக்கம் வெல்வது தற்போது உறுதி ஆகியுள்ளது.

லீக் சுற்றில் இமேன் ஒரு ‘ஆண்’ என குற்றம் சாட்டி இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கேரினி போட்டியில் இருந்து விலகியது பெரும் சர்ச்சையானது இதையடுத்து பலரும் இமேனுக்கு ஆதரவு கொடுத்து வந்த நிலையில் எதைப்பற்றியும் யோசிக்காமல் தன்னம்பிக்கையுடன் ஆடிய இமேன் கெலிஃப் நாட்டிற்காக பதக்கம் வெல்லப்போவது அவரது நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  💣 ₹59.5 Crore Day 1! Akhanda 2-க்கு ரசிகர்கள் தந்த Mega Response 😱🔥

More in Featured

To Top