Connect with us

இதுக்கில்லை என்றால் வேறு எதற்கு : பாஜக அரசே ஒரு தேசிய பேரிடர்தான் – போறப்போக்கில் விமர்சித்த கனிமொழி எம்.பி

Featured

இதுக்கில்லை என்றால் வேறு எதற்கு : பாஜக அரசே ஒரு தேசிய பேரிடர்தான் – போறப்போக்கில் விமர்சித்த கனிமொழி எம்.பி

மத்திய அரசு எந்த பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை, ஏனெனில் அவர்களே பெரிய தேசிய பேரிடராக தான் இருக்கின்றனர் என கனிமொழி எம்பி விமர்சித்துள்ளார் .

தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி கூறியதாவது :

தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போதும் சரி வயநாட்டில் இவ்ளோ பெரிய துயரம் சம்பவம் நிகழ்ந்துள்ள போதிலும் சரி மத்திய அரசு எந்த பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை

தமிழகத்தில் வெள்ளம் வந்தபோது ஏழு நாட்களுக்கு முன்பே நாங்கள் தெரிவித்தோம் என்று சொன்னார்கள்.அதில் எந்த ஒரு உண்மையும் இல்லை . இதே நிலைதான் இன்று கேரளாவிலும் நிகழ்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி எந்த உதவியும் செய்வதில்லை முன்பே தகவல் தந்து விட்டோம் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசு எந்த பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை, அவர்களே தேசிய பேரிடராக தான் இருக்கின்றனர். இந்த துயர்மிகு நேரத்தில் கேரள மக்களுடன் துணை நிற்போம்.

முதல்வர் உத்தரவின் பேரில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மீட்புக்குழு மற்றும் நிவரான பொருட்கள் உள்ளிட்டவைகள் அனுப்பப்பட்டுள்ளது என கனிமொழி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காமெடி நடிகர் செந்தில் மகனை பார்த்துள்ளீர்களா? புகைப்படம் தற்போது வைரல்!

More in Featured

To Top