Connect with us

எஸ்.கேவுடன் மோதும் ஜெயம் ரவி – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

Cinema News

எஸ்.கேவுடன் மோதும் ஜெயம் ரவி – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

தமிழ் திரையுலகில் இருபெரும் நட்சத்திரங்களாக வலம் வரும் சிவகார்த்திகேயன் மற்றும் ஜெயரவி ஆகியோரின் இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொதுவாக தமிழ் சினிமாவை பொறுத்தவரை தீபாவளி மற்றும் பொங்கல் வேளைகளில் பெரும் நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் கடந்த சில வருடங்களுக்கு முன் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமே பண்டிகை நாட்களில் வெளியாகி வந்த நிலையில் தற்போது நல்ல கதை இருந்தாலும் போதும் எந்த நட்சத்திரத்தின் படங்கள் வந்தாலும் பண்டிகை போல கொண்டாடுவோம் என்பதை படத்திற்கு படம் ரசிகர்கள் உணர்த்தி வருகின்றனர்.

அந்தவகையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மைய்யமாக கொண்டு உருவான சிவகார்த்திகேயனின் அமரன் படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக படக்குழு முன்பே அறிவித்திருந்தது.

இந்தநிலையில், தற்போது எஸ்.கேவின் அமரன் படத்திற்கு போட்டியாக ஜெயம் ரவியின் புதிய படம் ஒன்று களத்தில் குதித்துள்ளது.

ஜெயம் ரவியின் துள்ளலான நடிப்பில் உருவாகி உள்ள பிரதர் திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

இந்த இரு படங்கள் தீபவாளி ரேஸில் இணைந்துள்ள நிலையில் இன்னும் எத்தனை படங்கள் இந்த ரேஸில் பங்கேற்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்கில் விசில் அடிக்க வைத்தாரா விஜய்..? கோட் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!!

More in Cinema News

To Top