Connect with us

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவிப்பு..!!

Featured

திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரண நிதி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை தாக்கியதில் உயிரிழந்த பாகன் மற்றும் அவரது உறவினர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள தெய்வானை என்ற யானையின் பாகன் உதயகுமார் மற்றும் அவருடன் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் 18-11-2024 அன்று யானையின் அருகில் இருந்தபோது யானை திடீரென திமிறி அருகில் இருந்த பாகன் உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகிய இருவரையும் தூக்கி வீசித் தாக்கியுள்ளது.

யானையின் இந்த தாக்குதலில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்றும், பாகன் உதயகுமார் சிகிச்சை பலனின்றி மருத்துவனையில் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த உதயகுமார் மற்றும் சிசுபாலன் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேரளாவில் முதல்முறையாக வரலாற்றில் பெயர் பதித்த லோகா!

More in Featured

To Top