Connect with us

திருமண விழாவில் ரவி மோகனுடன் வந்த ஜோடியாக வந்த பெண் யார் தெரியுமா?

Featured

திருமண விழாவில் ரவி மோகனுடன் வந்த ஜோடியாக வந்த பெண் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன், முந்தைய பெயர் ஜெயம் ரவி. இவர் தற்போது ஜீனி, கரேத்தே பாபு மற்றும் பராசக்தி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரசிகர்கள் இந்த படங்களை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு, தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்து அறிவித்தார் ரவி மோகன். ஆனால், ஆர்த்தி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இப்போது, இந்த விவகாரம் குடும்ப நல நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பிரபல பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் ரவி மோகன் இணைந்திருப்பது குறித்து பலர் சந்தேகம் தெரிவித்தனர். ஆனால் இருவரும் நண்பர்களாகவே பழகுவதாக கூறப்பட்டது.

அந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷின் மகள் திருமணத்தில் ரவி மோகனும் கெனிஷாவும் ஒன்றாக கலந்துகொண்டனர். இருவரும் சேர்ந்து வந்த வீடியோவும், ஒன்றாக அமர்ந்திருக்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “முத்தையா இயக்கத்தில் அருண் விஜய்… மார்ச்சில் தொடங்கும் புதிய படம்”

More in Featured

To Top