Connect with us

பாடகியுடன் கைகோர்த்து வந்த ரவி மோகன்… கோபத்தில் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை !

Featured

பாடகியுடன் கைகோர்த்து வந்த ரவி மோகன்… கோபத்தில் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை !

நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பரில், அவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் அனைவரும் அதிர்ச்சியில் ஆனார்கள்.

அந்த நேரத்தில், பாடகி கெனிஷா தான் இந்த விவாகரத்துக்கு காரணம் எனும் சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் இருவரும் அதை மறுத்தனர். இந்நிலையில் இன்று, தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண விழாவில், ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஜோடியாக கைகோர்த்து வந்தனர்.

இதனால், அவர்களது உறவு உறுதியடைந்துவிட்டது எனும் வதந்திகள் வேகமாக பரவுகின்றன. இதற்கு பதிலளிக்க, ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். “ஒரு வருடமாக என்னை குற்றம்சாட்டிய விஷயத்தில் நான் பேசவில்லை. இப்போது உலகம் உண்மையை புரிந்துகொண்டுள்ளது” என கூறியுள்ளார்.

மேலும், தன்னை ‘ரவி மோகனின் முன்னாள் மனைவி’ என மீடியா குறிப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். சட்டப்படி இன்னும் விவாகரத்து பெறவில்லை என்றும், ரவி மோகன் ஒரு அப்பாவாக தனது குழந்தைகளை கவனிக்காமல் விட்டுவிட்டார் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதுமட்டுமல்ல, இருவரும் சேர்ந்து கட்டிய வீட்டை ரவி மோகன், வங்கியின்மூலம் காலி செய்ய வைத்ததாகவும் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடிதடியும் கலவரமும் சூழ்ந்த பிக் பாஸ் வீடு! திவாகர் நெஞ்சில் எட்டி மிதித்த விஜே பார்வதி!

More in Featured

To Top