Connect with us

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்: தக் லைஃப் பற்றி கமல் ஹாசன் முக்கிய அறிவிப்பு!

Featured

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்: தக் லைஃப் பற்றி கமல் ஹாசன் முக்கிய அறிவிப்பு!

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் நடித்துள்ள புதிய திரைப்படம் “தக் லைஃப்”. இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து நடிகர் சிம்பு முதன்முறையாக இணைந்து நடிக்கிறார். மேலும், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இசையமைத்துள்ளவர் ஏ.ஆர். ரஹ்மான். “தக் லைஃப்” திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மே 16ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு, இசை விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். புதிய தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நாஞ்சில் விஜயனுக்கு குழந்தை பிறந்தது! பாசம் நிறைந்த கண்ணீர்…

More in Featured

To Top