Connect with us

புஷ்பா 2 படம் குறித்து மனம் திறந்த நடிகை ராஷ்மிகா – என்ன சொன்னார் தெரியுமா..?

Cinema News

புஷ்பா 2 படம் குறித்து மனம் திறந்த நடிகை ராஷ்மிகா – என்ன சொன்னார் தெரியுமா..?

ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்புக்கிடையே விறுவிறுப்பாக உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படம் குறித்து நடிகை ராஷ்மிகா மனம்திறந்து பேசியுள்ளது ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் கொடி பறப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன் இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘புஷ்பா: தி ரைஸ்’.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகாவின் தரமான நடிப்பில் திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .

இதுமட்டுமின்றி இப்படம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது . இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பால் தற்போது புஷ்பா பார்ட் 2 விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், புஷ்பா படத்தின் பயணம் குறித்து மனம்திறந்து பேசியுள்ள நடிகை ராஷ்மிகா கூறிருப்பதாவது :

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் எனது கதாபாத்திரத்திற்கு கூடுதல் பொறுப்பும் சேர்ந்துள்ளது. புஷ்பா படப்பிடிப்பு தளம் என் வீடு போல மாறி விட்டது.

இன்னும் சில நாட்களில் நாங்கள் பிரியப்போவதை நினைத்தால் மிகவும் கடினமாக உள்ளது அனைவரும் எதிர்பார்ப்பது போல் புஷ்பா 3 ஆம் பாகமும் நிச்சயம் வரும் என உங்களை போல் நானும் எதிர்பார்க்கிறேன் என நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top