Connect with us

“6 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலை கடந்த ரன்பிர் கபூரின் ‘Animal’ திரைப்படம்!”

Cinema News

“6 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலை கடந்த ரன்பிர் கபூரின் ‘Animal’ திரைப்படம்!”

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் நடித்த அனிமல் படம் கடந்த டிசம்பர் 1ம் தேதி வெளியான நிலையில், முதல் நாளே 116 கோடி வசூலை ஈட்டியது. வார நாட்களிலும் படத்தின் வசூல் குறையாமல் ரியல் அனிமலாக பாக்ஸ் ஆபிஸில் இதுவரை இந்தியாவில் மட்டும் 312.96 கோடி ரூபாய் வசூலை 6 நாட்களில் ஈட்டியுள்ளது.

உலகளவில் அனிமல் திரைப்படம் இதுவரை 527.6 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. பிரம்மாஸ்திரா திரைப்படம் 400 கோடியில் எடுக்கப்பட்டு 431 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.

அதிகபட்சமாக ரன்பீர் கபூர் நடித்த படங்களிலேயே ராஜ்குமார் ஹிரானி இயக்கிய சஞ்சு படம் தான் 588 கோடி வசூல் ஈட்டியுள்ளது. இந்நிலையில், அனிமல் திரைப்படம் அதனை முறியடித்து முதல் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு பாலிவுட்டில் பல படங்கள் வந்தாலும், ஷாருக்கான் நடித்த பதான், ஜவான் உள்ளிட்ட படங்கள் மட்டுமே தலா 1000 கோடிகளுக்கு மேல் வசூல் ஈட்டி பாலிவுட்டை காப்பாற்றின. மேலும், சன்னி தியோலின் கதர் 2 மற்றும் ரன்பீர் கபூரின் அனிமல் படங்கள் 500 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டும் படங்களாக மாறியுள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top