Connect with us

“வைரலாகிவரும் ‘Brother’ படத்தின் Shooting Spot Pics..! திருமண கோலத்தில் பூமிகா, கணவராக நடிக்கும் நடிகர் இவரா?!”

Cinema News

“வைரலாகிவரும் ‘Brother’ படத்தின் Shooting Spot Pics..! திருமண கோலத்தில் பூமிகா, கணவராக நடிக்கும் நடிகர் இவரா?!”

நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் தன்னை சிறப்பாக ஈடுபடுத்தி வருகிறார். இந்த ஆண்டில் அவரது பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்கள் வெளியாகின. இதில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் டைட்டில் கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது. தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான இறைவன் படம் சரியாக கைக்கொடுக்கவில்லை.

தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் கமிட்டாகி ஓய்வில்லாமல் நடித்து வரும் ஜெயம் ரவி, இயக்குநர் எம் ராஜேஷுடன் இணைந்து பிரதர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அக்கா மற்றும் தம்பி இடையிலான உறவை கதைக்களமாக கொண்டுள்ளார் இயக்குநர். படத்தில் நடிகை பூமிகா அக்காவாக நடித்து வருகிறார். மேலும் படத்தில் பிரியங்கா மோகன், நட்டி நட்ராஜ், சரண்யா பொன்வண்ணன், சீதா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் காமெடி மற்றும் சென்டிமெண்ட் தூக்கலாக இருக்கும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக், போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாகவும் டீம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்தப் புகைப்படங்களில் மணப்பெண்ணாக பூமிகாவும் அவரது துணையாக நட்டி நட்ராஜூம் காணப்படுகின்றனர். மேலும் புகைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சீதா, இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்டவர்களும் காணப்படுகின்றனர். மிகவும் கலர்புல்லாக இந்தப் புகைப்படங்கள் காணப்படுகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது சென்னை குடும்பநல நீதிமன்றம்..!!

More in Cinema News

To Top