Connect with us

‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காண நாளை தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!!

Featured

‘மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை காண நாளை தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..!!

‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மற்றும் அதனை சுற்றுலா பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது . இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது படிப்படியாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் தமிழக அரசின் செயல்பாட்டை பாராட்டி வந்தாலும் மறுபக்கம் மின்சாரம் இல்லாமல் இருளில் தத்தளித்து வருவதாக வசைபாடியும் வருகின்றனர்.

இதற்கிடையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரி செய்திட இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி வழங்கிடக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சூழலில் ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

வெள்ளம் பாதித்த பகுதிகளை நாளை ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பார்வையிட உள்ளதாகவும் பிற்பகலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top