Connect with us

“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” கார்த்திக் சுப்புராஜின் ஓர் அற்புதமான படைப்பு – நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்…

Cinema News

“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” கார்த்திக் சுப்புராஜின் ஓர் அற்புதமான படைப்பு – நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஓர் அற்புதமான படைப்பு என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் , சித்தார்த் , பாபி சிம்ஹா , லட்சுமி மேனன் நடிப்பில் உருவான ஜிகர்தண்டா திரைப்படம் சூப்பர் டூப்பர் பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றது . புத்தம் புதிய கதை களத்துடன் திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமான “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ராகவா லாரன்ஸ் , எஸ்.ஜே.சூர்யா ,கருணாகரன் ,பாபி ,உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடைத்துள்ளனர். இந்நிலையில் ஜிகர்தண்டா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எவ்ளோ வரவேற்பு இருந்ததோ அதைவிட பல மடங்கு அதிகமாக “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படத்திற்கு கிடைத்து வருகிறது .

இந்நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் கொண்டாடும் இப்படத்திற்கு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் அவரது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

“ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்தி செய்தியில் கூறிருப்பதாவது :

ஜிகர்தண்டா Xx படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள், “லாரன்ஸால்’ இப்படியும் நடிக்க முடியுமா..? என்ற பிரம்மிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்.ஜே.சூர்யா’ இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லதனம். நகைச்சுவை . குணசித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்.

திருவோட கேமிரா விளையாடி இருக்கிறது கலை இயக்குனரின் உழைப்பு பாராட்டிற்குரியது திலீப் சுப்ராயனின் சண்டை காட்சிகள் அபாரம் ‘சந்தோஷ் நாராயணன்’ வித்தியாசமான படங்களுக்கு வித்தியாசமாக இசை அமைப்பதில் மன்னர். இசையால் இந்த படத்திற்கு உயிரூட்டி, தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார்.

இந்த படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு என்னுடைய தனி பாராட்டுகள். படத்தில் வரும் பழங்குடிகள் நடிக்கவில்லை வாழ்ந்து இருக்கிறார்கள் நடிகர்களுடன். போட்டி போட்டு கொண்டு யானைகளும் நடித்து இருக்கின்றன. செட்டானியாக நடித்து இருக்கும் விது அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அற்புதம்.

இந்த படத்தில் கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார். பிரமிக்க வைக்கிறார். சிந்திக்க வைக்கிறார். அழவும் வைக்கிறார். மா proud of you கார்த்திக் சுப்புராஜ் My hearty congratulations to கார்த்திக் சுப்புராஜ் And.Team என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

See also  மேஜர் முகுந்தன் வரதராஜனின் நினைவிடத்தில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அஞ்சலி - வைரல் போட்டோ..!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top