Connect with us

இரவில் இது இல்லாமல் என்னால் தூங்கவே முடியாது – பகீர் கிளப்பிய நடிகை ஷகீலா

Celebrities

இரவில் இது இல்லாமல் என்னால் தூங்கவே முடியாது – பகீர் கிளப்பிய நடிகை ஷகீலா

இன்று வரை சிங்கிளாகவே இருந்து அங்கிளாக மாறி வரும் 90’s கிட்ஸ்-ன் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஷகீலா .

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அன்றைய காலகட்டத்தின் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்த இவர் மலையாள திரையுலகில் கொடிகட்டி பறந்தார் . எத்தனை நடிகைகள் இவர் முன் போட்டிக்கு வந்தாலும் இவரது மார்க்கெட் மட்டும் ஜெட் வேகத்தில் வான்நோக்கி சென்றது .

நெடு நீண்ட நாட்களாக பெரிய திரையில் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை முழுவதுமாக நிறுத்திய ஷகீலா தற்போது சின்னத்திரையில் அவருக்கு பிடித்ததை செய்து அவர் உண்டு அவர் வேளை உண்டு என இருந்து வருகிறார் .

இந்நிலையில் நடிகை ஷகிலா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் தற்போது செம வைரலாக வலம் வருகிறது .

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது : நான் 13 வயதில் இருந்தே சம்பாதித்து வருகிறேன் என்பதால் ஒருவித திமிர் எனக்குள் வந்துவிட்டது. இதன் காரணமாகவே எனக்கு இன்னொரு துணை வேண்டும் என்று எனக்கு தோணவில்லை அது என்றும் தோணாது .

இவை எல்லாவற்றிக்கும் மேல் எனக்கு மது மற்றும் புகைப்பழக்கம் அதிகமாக உள்ளது, முதலில் மற்றவர்களை போல் நானும் சாதாரணமாக ஆரம்பித்த தான் ஆரம்பித்தேன் ஆனால் தற்போது மது இல்லாமல் என்னால் தூங்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் .

இந்த பழக்கத்தை இன்று வரை என்னால் விட முடியவில்லை இத்தனை இடையூறுகளை வைத்துக்கொண்டு இன்னொருவரை திருமணம் செய்து அவரது வாழ்க்கையை கெடுக்க நான் விரும்பவில்லை என்பதாலேயே திருமணம் வேண்டாம் என்ற முடிவில் உறுதியாக இருந்தேன் தற்போதும் அப்படியே இருக்கிறேன் என ஷகீலா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  40வது பிறந்த நாளில் காஜல் அகர்வாலின் சொத்து மதிப்பு வெளியானது!

More in Celebrities

To Top