Connect with us

ரஜினிகாந்த் – டி. ராஜேந்தர் இடையிலான நெருங்கிய நட்பு… பிரபல தயாரிப்பாளர் கூறும் உண்மை!

Featured

ரஜினிகாந்த் – டி. ராஜேந்தர் இடையிலான நெருங்கிய நட்பு… பிரபல தயாரிப்பாளர் கூறும் உண்மை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றுகிறார்.

இந்தப் படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் மற்றும் சோபின் ஷபீர் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். மேலும், பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் கேமியோ ரோலில் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இருந்து வெளியான “சிகுடு” பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, ‘கூலி’ திரைப்படம் மற்றும் டி. ராஜேந்தர் – ரஜினிகாந்த் இடையேயான நட்பை பற்றிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறியதாவது:
“இந்த படத்தில் டி. ராஜேந்தரை பயன்படுத்தலாம் என்ற எண்ணம் லோகேஷ் கனகராஜுக்குத் தோன்றியது. இதை ரஜினியிடம் கூறியபோது, சமீப காலமாக டி.ஆருக்கு உடல் நலம் சரியில்லாத நிலைமை காணப்படுகிறது. இந்த நேரத்தில் அவர் எப்படித் டான்ஸ் ஆட முடியும்? என்று ரஜினி கேள்வி எழுப்பினார். ஆனால் டிஆர், ‘ரஜினிக்காக எதையும் செய்வேன்’ என்று உடனே சம்மதம் தெரிவித்தார்.

முன்னதாக, ஒரு முக்கிய அரசியல் கட்சியிலிருந்து ரஜினிக்கு எதிராக வலுவான எதிர்ப்புகள் இருந்தபோது, டிஆர் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்கினார். அந்த ஆதரவு இன்னும் அவர்களது நட்பினை உறுதியாக வைத்திருக்கிறது.” இந்த தகவல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பகிரப்பட்டு வருவதுடன், ரஜினி – டிஆர் நட்பின் வலிமையை மேலும் ஒருமுறை உறுதியடிக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸில் அர்ச்சனாவை போல் VJ பார்வதிக்கு வரும் குடச்சல், அவஸ்தைப்படும் சீரியல் பிரபலங்கள்

More in Featured

To Top