Connect with us

சூர்யாவுக்கு சின்ன வயதில் இருந்தே கிரஷ் – உண்மையை வெளிப்படுத்திய கார்த்தி!

Featured

சூர்யாவுக்கு சின்ன வயதில் இருந்தே கிரஷ் – உண்மையை வெளிப்படுத்திய கார்த்தி!

நடிகர் சூர்யா தற்போது கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர். ஆனால் சமீப காலமாக அவருக்கு பெரிதாக ஹிட் கிடைக்காமல் சிலவாறு திணறி வருகிறார்.

அவர் நடித்த ‘கங்குவா’ படம் பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளடக்கியதாக இருந்தாலும், அது தோல்வியடைந்தது. அதன் பின்னர் வந்த அவரது அடுத்த திரைப்படமான ‘ரெட்ரோ’ படமும் எதிர்மறையான விமர்சனங்களை தான் பெற்றது. இருப்பினும், ‘ரெட்ரோ’ படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக நடிகர் சூர்யா அறிவித்திருந்தார்.

இதற்கிடையே, சூர்யா குறித்து ஒரு பழைய தகவல் தற்போது மீண்டும் இணையத்தில் பேசப்படுகின்றது. சூர்யாவுக்கு சிறுவயதில் இருந்தே நடிகை கௌதமி மீது ஒரு ‘கிரஷ்’ இருந்ததாக அவரது தம்பி, நடிகர் கார்த்தி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். “சூர்யாவுக்கு ஒரு நடிகையை ரொம்ப பிடிக்கும். ‘சிக்குபுக்கு ரயிலே’ பாடல் தெரியுமா?” எனக் கூறிய கார்த்தி, அந்தப் பாடலில் நடித்த கௌதமி மீது தான் சூர்யாவுக்கு முதல் கிரஷ் ஏற்பட்டது என தெரிவித்திருந்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பாக்ஸ் ஆபிஸில் வேகம் காட்டும் ‘பத்தா’ – 4 நாட்களில் விஜய் சேதுபதி படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

More in Featured

To Top