Connect with us

ஜெயிலர் 2 திரைப்படத்தில் வில்லனாக இவர் நடிக்கிறாரா? ஒரு வெறித்தனமான ட்விஸ்ட்!

Featured

ஜெயிலர் 2 திரைப்படத்தில் வில்லனாக இவர் நடிக்கிறாரா? ஒரு வெறித்தனமான ட்விஸ்ட்!

தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி ஹிட் – ரஜினியின் ஜெயிலர். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இப்படம் 2023-ம் ஆண்டு வெளியானது. ரம்யா கிருஷ்ணன், விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் ரூ. 635 கோடி வசூல் செய்தது.

இப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் ரஜினிக்கு வில்லனாக யார் நடிக்கப் போகிறார் என்பதைப்பற்றிய தகவல் இல்லை.

இந்த நிலையில், ஜெயிலர் 2-ல் நடிகர் பகத் பாசில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுவரை வில்லன் யார் என தெரியாமல் இருந்த நிலையில், பகத் பாசில் பற்றி வந்த தகவலால், அவர் தான் வில்லனாக இருக்கலாம் என ரசிகர்கள் ஊகிக்கிறார்கள்.

இது அதிகாரப்பூர்வமான தகவலா என்பதை இன்னும் உறுதியாகக் கூற முடியவில்லை.
அதோடு, வேட்டையன் படத்தில் ரஜினியுடன் பகத் பாசில் ஏற்கனவே இணைந்து நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  📺 OTT அப்டேட் – “Happy Raj” ரசிகர்களை கவரும் குடும்ப திரைப்படம்

More in Featured

To Top