Connect with us

“புஷ்பா 2 மட்டும் இல்லை 3ம் பாகமும் நிச்சயம் வரும்” – அல்லு அர்ஜுன் கொடுத்த டக்கர் அப்டேட்

Cinema News

“புஷ்பா 2 மட்டும் இல்லை 3ம் பாகமும் நிச்சயம் வரும்” – அல்லு அர்ஜுன் கொடுத்த டக்கர் அப்டேட்

அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது புஷ்பா 2 உருவாகி வரும் நிலையில் புஷ்பா 3 ஆம் பாகமும் நிச்சயம் வரும் என அவரே கூறிருப்பது ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் கொடி பறப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன் இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு சு வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’.

குமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .

இதுமட்டுமின்றி இப்படம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது . இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பால் தற்போது புஷ்பா பார்ட் 2 விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், பெர்லின் திரைப்பட விழாவில் ‘புஷ்பா ’ படம் திரையிடப்பட உள்ளது. இதன்காரணமாக தற்போது அல்லு அர்ஜுன் படக்குழுவுடன் பெர்லினில் உள்ளார்.

இந்த விழாவில் பேசிய அல்லு அர்ஜுன் கூறியதாவது :

புஷ்பா படத்திற்கு கொடுத்த ஆதரவுக்கு நன்றி புஷ்பா 2-வது பாகம் முதல் பாகத்தை விட , புதுவித அனுபவமாகவும் இருக்கும்.

இதுமட்டுமின்றி புஷ்பா படத்தின் 3வது பாகமும் நிச்சயம் வரும் அதன் அடுத்த சீக்வல்களை உருவாக்க நாங்கள் ஆவலாக உள்ளோம் . அதற்கான அற்புதமான யோசனைகளை எங்களிடம் உள்ளன உங்களின் எதிர்பார்ப்பை 100 சதவீதம் பூர்த்தி செய்ய இன்னும் கடுமையாக உழைப்போம் என நடிகர் அல்லு ராஜுன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தாய் மண்ணில் அதிரடி காட்டிய டெல்லி அணி - மும்பை அணிக்கு 258 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top