Connect with us

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் – பெங்களூரு அணிக்கு 177 ரன்கள் இலக்கு..!!

Featured

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் – பெங்களூரு அணிக்கு 177 ரன்கள் இலக்கு..!!

நடப்பாண்டுக்கான IPL தொடரில் இன்று நடைபெறும் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி பெங்களூரு அணிக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணியும் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான் – ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர் நிதானமாக தங்களது ஆட்டத்தை தொடங்கிய இந்த ஜோடி அணிக்கு தேவையான ரன்களை எடுத்து வந்த நிலையில் சிராஜ் வீசிய பந்தில் பேர்ஸ்டோவ் அவுட்டானார்.

அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங், தவானுடன் கை கோர்க்க இந்த ஜோடியாவது நிலைக்குமா என எதிர்பார்த்த நிலையில் மேக்ஸ்வெல் வீசிய பந்தில் பிரப்சிம்ரன் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டமிழக்க . அடுத்த ஓவரில் தவானும் 45 ரன்களில் விக்கெட்டானார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 176 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பெங்களூரு அணி களத்தில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top