Connect with us

ஜூனில் ‘தலைவர்171’ படப்பிடிப்பு தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!!

Cinema News

ஜூனில் ‘தலைவர்171’ படப்பிடிப்பு தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!!

லோகேஷ் மற்றும் ரஜினிகாந்த் காம்போவில் உருவாக இருக்கும் ‘தலைவர்171’ படத்தின் சிறப்பான தரமான அப்டேட் வெளியாக உள்ளது.

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

படம் இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன் கேட்டுக்கொண்டதன் காரணமாக அவர்களுடன் சேர்ந்து ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்.

“இனிமேல்” என பெயரிடப்பட்டுள்ள அந்த பாடலுக்கு கமல்ஹாசனின் அன்பு மகளான ஸ்ருதிஹாசன் தான் இசையமைத்து இருக்கிறார். இந்த பாடலின் வரிகளை உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி இருக்கிறார்.

இந்த ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ் கூறியதாவது :

எனக்கு பொதுவாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்ததில்லை. என்னிடம் அவர்கள் கதை சொன்ன விதம், கமல்ஹாசனின் பாடல் இதெல்லாம் சேர்ந்து சரி நடிக்கலாம் என தோன்றியது.

இந்த ஆல்பம் பாடலுக்குப் பின் கேமராவுக்கு முன்னாள் நிற்கும் பயம் குறைந்துவிட்டது. அதற்கு காரணம் ஸ்ருதிஹாசன் தான் .

தற்போது வரை 3 படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கியுள்ளேன். அதனை முதலில் நல்லபடியாக எடுத்து முடிக்க வேண்டும்.

ஜூன் மாதத்தில் இருந்து ‘தலைவர்171’ படப்பிடிப்பு தொடங்கும். இப்படம் முடித்த கையோடு ‘கைதி 2’ படத்தை இயக்க உள்ளேன் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இனிமேல் பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது லோகேஷ் கொடுத்த இந்த சிறப்பான தரமான அப்டேட் ரசிகர்களை மேலும் குஷியாக்கி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது..!!!

More in Cinema News

To Top