Connect with us

காவல்துறை சார்பில் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி – காவல்துறையின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்

Featured

காவல்துறை சார்பில் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி – காவல்துறையின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்

சென்னை பெருநகர காவல்துறையின் புதிய முயற்சியாக பொதுவெளியில் இசை நிகழ்ச்சி என்ற புதிய திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிரது.

ஆசியாவின் முதல் நீண்ட நெடு கடற்கரையாகவும் உலகின் 2 வது நீண்ட நெடு கடற்கரையாகவும் விளங்கும் மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் சென்னை பெருநகர காவல்துறையின் இசைக்குழுவினர் இனி வாரம்தோறும் சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். அதற்கான நிகழ்ச்சியை இன்று தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .

முறையாக பயிற்சி பெற்றுள்ள காவல்துறை இசைக்கலைஞர்கள், நேர்த்தியான இசையை வழங்கியதை இன்றைய தொடக்க விழாவில் பொது மக்களும் காவல்துறையினரும் கேட்டு ரசித்தனர் .

இந்தியாவிலேயே முதல்முறையாக காவல்துறை சார்பில் பொதுவெளியில் இசை நிகழ்ச்சி நடத்தும் இந்த புதிய திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top