Connect with us

முரட்டுத்தனமா வில்லனாக நடிக்கும் பிருத்விராஜ் – எந்த படத்தில் தெரியுமா..?

Cinema News

முரட்டுத்தனமா வில்லனாக நடிக்கும் பிருத்விராஜ் – எந்த படத்தில் தெரியுமா..?

கேரள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் புதிய படம் ஒன்றில் கொடூர வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அகல பாதாளத்தில் கிடந்த கன்னட சினிமாவை கே.ஜி.எப்.என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் ஒட்டு மொத்த உலகையே திரும்பி பார்க்க வைத்தவர்கள் தான் நடிகர் யாஷ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் . இந்த படத்தின் இரண்டு பாகங்களும் உலகளவில் விஸ்வரூப வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இயக்குநர் பிரசாந்த் நீலின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு ‘சலார்’ கே.ஜி.எப் படத்தை தயாரித்த ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தான் சலார் படத்தையும் தயாரித்துள்ளது .

திரையரங்குகளில் தற்போது வெற்றிகரமாக ஓடி வரும் இந்த படத்தின் பிரபாஸ் நாயகனாக நடிக்க வெறித்தனமான வில்லனாக ப்ரித்திவிராஜ் நடித்திருந்தார் .

இந்நிலையில், சலார் படத்தில் கொடூர வில்லனாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த ப்ரித்திவிராஜ் தற்போது மீண்டும் ஒரு மாஸ் படத்தில் வில்லனாக ஒப்பந்தமாகி உள்ளார் . இயக்குநர் விபின் தாஸ் இந்த படத்தை இயக்க அந்த படத்தில் நாயகனாக பஷில் ஜோசப் தான் இதிலும் கதாநாயகனாக நடிக்கிறார்.இந்த படத்தில் தான் பிருத்விராஜ் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச முடிவு - பெங்களூரின் இலக்கு என்னவாக இருக்கும்..!!

More in Cinema News

To Top