Connect with us

குரூப் 7A தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பை வெளியிட்டது TNPSC

Featured

குரூப் 7A தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பை வெளியிட்டது TNPSC

Group 7A தேர்வு எழுத இருப்பவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை http://TNPSC.GOV.IN என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என TNPSC அறிவித்துள்ளது.

இதுகுறித்து TNPSC வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

06.01.2024 முற்பகல் மற்றும் பிற்பகல் மற்றும் 07.01.2024 முற்பகல் நடைபெறவுள்ள தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-1 (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) பதவிக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை) (கணினி வழி)

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் : 22/2023, நாள் 13.10.2023-ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தொகுதி VII-A பணியில் அடங்கிய செயல் அலுவலர், நிலை-1 (தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணி) பதவிக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை 06.01.2024 முற்பகல் மற்றும் பிற்பகல் மற்றும் 07.01.2024 முற்பகல் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும் என TNPSC வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கோடை வெயிலுக்கு குதூகலமாக வெளியானது குரங்கு பெடல் படத்தின் ட்ரைலர்..!!

More in Featured

To Top