Connect with us

மலையாளத்தில் பட்டய கிளப்பிய ‘பிரேமலு’ படத்தின் தமிழ் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Cinema News

மலையாளத்தில் பட்டய கிளப்பிய ‘பிரேமலு’ படத்தின் தமிழ் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

மலையாளத்தில் பட்டய கிளப்பிய ‘பிரேமலு’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அதன் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது .

நஸ்லன் கே.கஃபூர், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் உள்பட பல நட்சத்திரங்கள் ஒன்று கூறி நடித்துள்ள திரைப்படமே ‘பிரேமலு’.

மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை கிறிஸ் ஏ.டி. இயக்கி உள்ளார் , காதல், காமெடி மிக்ஸட் எமோஷன்கள் நிறைந்த இந்தப்படம், கடந்த மாதம் 9-ம் தேதி வெளியானது.

இப்படம் வெளியான நாள் முதல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் மலையாளத்து வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.

100 கோடி வசூலில் இணைத்துள்ள இந்த தமிழில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்தை வரும் 15-ம் தேதி தமிழ் மொழியில் தமிழக திரையரங்குகளில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .

ஏற்கமாவே மலையாள படமான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் ‘பிரேமலு’ படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை பவித்ரா லட்சுமியின் Latest போட்டோஷூட்..

More in Cinema News

To Top