Connect with us

“பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘Salaar’ படத்தின் Trailer வெளியானது!”

Cinema News

“பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘Salaar’ படத்தின் Trailer வெளியானது!”

நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் சலார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சாஹோ, ராதே ஷியாம், ஆதிபுருஷ் ஆகிய மூன்று படங்களும் படுதோல்வியை சந்தித்ததால், சலார் படத்தின் வெற்றியை மலைபோல் நம்பி இருக்கிறார் பிரபாஸ்.

இப்படத்தை KGF படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி இருக்கிறார். KGF படங்களை தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்து உள்ளது. சலார் படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்திருக்கிறார்.

சலார் திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வருகிற டிசம்பர் 22-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படம் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தநிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top