Connect with us

“பிரபாஸ் நடித்த ‘Salaar’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!”

Cinema News

“பிரபாஸ் நடித்த ‘Salaar’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்!”

பிரபாஸ் நடித்த ‘சலார்’ என்ற திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் புதிய ரிலீஸ் தேதியுடன், இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

பிரபாஸ் நடித்த ‘சலார்’ திரைப்படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்யப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.

பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ள இந்த படத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவிபஸ்ருர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ’KGF’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திடீரென வெளிநாடு சென்ற ரஜினிகாந்த் - என்ன மேட்டர் தெரியுமா..?

More in Cinema News

To Top