Connect with us

தமிழகம் வரும் பிரதமர் மோடி போக்குவரத்தில் மாற்றம் செய்த காவல்துறை…!!

Featured

தமிழகம் வரும் பிரதமர் மோடி போக்குவரத்தில் மாற்றம் செய்த காவல்துறை…!!

பிரதமர் மோடியின் நாளைய வருகையை ஒட்டி கோவை சூலூர், பல்லடம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

நாளை 27.02.2024-ம் தேதி அன்று இந்திய பிரதமர் மோடி கோவை சூலூர் மற்றும் பல்லடம் வருவதையொட்டி காலை 06.00 மணி முதல் மாலை வரை கனரக வாகனங்களுக்கு மட்டும் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன்
தெரிவித்துள்ளார்.

பாலக்காட்டிலிருந்து வாளையார் வழியாக வரும் தாராபுரம், திருச்சி செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் மதுக்கரை, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.

கோவை மாநகருக்குள் இருந்து வரும் கனரக வாகனங்கள் சுங்கம் வழியாக பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.

கோவை மாநகர் சிங்காநல்லூரில் இருந்து திருச்சி சாலையில் வரும் கனரக வாகனங்கள் சிந்தாமணிபுதூர் நான்கு ரோடு சந்திப்பு, L&T Bye-pass, பட்டணம் பிரிவு, G-Square, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும். ,

கோவை சிங்காநல்லூரில் இருந்து திருச்சி சாலையில் வரும் கனரக வாகனங்கள் சிந்தாமணிபுதூர் நான்கு ரோடு சந்திப்பு, நீலாம்பூர், அவினாசி சாலை, கருமத்தம்பட்டி, அவினாசி வழியே செல்ல வேண்டும்.

பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் செல்லும் கனரக வாகனங்கள் உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.

கருமத்தம்பட்டியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சூலூர் வழியில் செல்வதற்கு அனுமதி இல்லை. நீலாம்பூர், சிந்தாமணிபுதூர் சந்திப்பு, கற்பகம் கல்லூரி சந்திப்பு, பொள்ளாச்சி வழியே செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கமல்ஹாசனின் 'தக்லைஃப்' படத்தில் நடிகர் சிம்பு - இணையத்தை கலக்கும் டக்கர் புகைப்படம்..!!

More in Featured

To Top