Connect with us

ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் மூன்று நாளில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் மூன்று நாளில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படம் மூன்று நாளில் செய்துள்ள வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.இவரது நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் பார்க்கிங் அறிமுக இயக்குநரான ராம் குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது.

சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தில் ஹரிஸ் கல்யாணுடன் இந்துஜா, எம். எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு, பிராத்தனா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடத்தியுள்ளனர்.இப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வரும் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று உருவெடுத்துள்ளது.

இந்நிலையில் இப்படம் வெளியான 3 நாட்களில் வசூல் செய்துள்ள விவரம் தற்போது வெளியாகி உள்ளது . அதன்படி முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வரும் இப்படம் இது வரை சுமார்1.6 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தமிழ்நாட்டில் தடை – அதிரடி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு..!!

More in Cinema News

To Top